"செல்போனில் ஆபாச படங்கள், வீடியோக்களை நீக்கிவிடுங்கள்" - சாத்தான் நுழையும் இடம் இதுதான் என போப் ஆண்டவர் பேச்சு..!

0 4327

தொலைபேசி, இணையம் வழியாகப் பரவும் ஆபாசங்களுக்கு விதிவிலக்குகள் இல்லை, பாதிரியார்களும் கன்னியாஸ்திரீகளும் அதனைப் பார்க்கின்றனர் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் உடல் மற்றும் மனநலத்தை டிஜிட்டல் ஆபாசம் பாதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். ரோம் நகரில் பாதிரியர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய போப் பிரான்சிஸ், இங்கிருந்துதான் சாத்தான் உள்ளே நுழைகிறது என்றார்.

உங்கள் செல்போன்களில் உள்ள ஆபாச இணையதளங்கள், படங்கள், வீடியோக்கள் யாவற்றையும் நீக்கி விடுங்கள் என்றும் 86 வயதான போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments